அரசு ஒன்று இல்லாத தமிழர்கள் பலம் பெற நாடு கடந்த தமிழீழ அரசு அவசியமே ‐ இலங்கையில் இருந்து ஆதிசங்கரன்: [Thursday, 09 July 2009 04:56 AM]
இலங்கையில் தமிழ் மக்களின் அன்றாட அவல நிலைக்கோ அரசியல் நியாயத்திற்கோ இலங்கையில் இடமில்லாத சூழ்நிலையே காணப்படுகின்றது. இவற்றை செய்ய புலம்பெயர் மக்களால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அமைப்பு தேவை. இலங்கை அரசிடமிருந்து தமிழ் மக்களுக்கு நியாயமான தீர்வு கிடைக்கும் என்பதற்கு உறுதியே இல்லை. ஜனாதிபதியின் இந்து பத்திரிகைக்கான நேர்காணலில் தமிழ் மக்களின் சகல சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. ......
யாழ்ப்பாண வர்த்தகர்களின் வணிக நடவடிக்கைகளும் கோத்தபாயவின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையே ‐ யாழ் சென்ற அமைச்சர்கள் தெரிவிப்பு: [Thursday, 09 July 2009 10:19 AM]
வணிகர்கள் தமது பாரவூர்திகளை கொழும்பில் பொருட்களை ஏற்றியிறக்க அனுமதிக்குமிடத்து பொருட்களுக்கான போக்குவரத்துக் கட்டணம் குறையும் எனவும் இதன்மூலம் குடாநாட்டு மக்களுக்கு நியாயமான விலைகளில் பொருட்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தனர்.
எனினும் இது பாதுகாப்பு அமைச்சுடன் தொடர்புடைய விடயம் எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் தாம் இது தொடர்பாக உரையாடுவதாகவும் அமைச்சர்கள் தெரிவித்தனர்
சிங்கத்தின் தலைமையிலான சிங்கப்படையினரால் எந்தவொரு யுத்தத்தையும் வெற்றிகொள்ள முடியும் ‐ சரத் பொன்சேகா: [Thursday, 09 July 2009 05:38 PM]
படைத் தளபதி ஒட்டகமாகவும், படைவீரர்கள் சிங்கங்களாகவும் இருந்தால் ஒருபோதும் யுத்தத்தை வெற்றிகொள்ள முடியாதென அரேபிய பழமொழியொன்று இருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், இலங்கையை பொறுத்தவரையில் படைத்தளபதியும், படைவீரர்களும் சிங்கங்களாகவும் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல்களுக்கு முன்னர் தீர்வுத் திட்டம் முன்வைக்கப்பட வேண்டும் ‐ TNA :
[Thursday, 09 July 2009 02:01 AM]
நாட்டின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் பாதுகாக்க நாமும் தோள்கொடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அரசியல் ரீதியான நிர்வாக அலகு முறைமையொன்றையே தாம் வேண்டி நிற்பதாகவும், அரசியல் சாசன ரீதியான தெளிவான அதிகாரப் பகிர்வு அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ...
வடக்கு அப்பாவி சிறுவர்களை தமிழீழ விடுதலைப் புலிகள் சீரழியச் செய்துள்ளனர் – ஜனாதிபதி: [Thursday, 09 July 2009 05:27 PM]
அகதி முகாம்களில் தங்கியுள்ள சில சிறுவாகள் ரி56 துப்பாக்கி ஒன்றை கூட பொருத்தக் கூடிய ஆற்றல் உடையவர்களாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். மூன்று தசாப்த காலத்திற்கு பின்னர் சிறுவர்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டிய காலம்...
ஒரேபார்வையில் இந்தியா:‐ இது உரிமைக் குரல் தினமணி ஆசிரியர் தலையங்கம்: [Thursday, 09 July 2009 10:08 AM]
இத்தனை நாள்களும் விடுதலைப் புலிகள் இவர்களை சுட்டுவிட்டு எங்கள் மீது பழி போடுகிறார்கள் என்றும், இந்த மீனவர்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவுகிறார்கள் என்றும் இலங்கை அரசு தனது செய்கைகளுக்கு நியாயம் கற்பித்தது.....
பிரபாகரன் மரணம் இலங்கை உறுதிப்படுத்த வேண்டும்‐ எஸ். எம்.கிருஷ்ணா :
[Thursday, 09 July 2009 07:56 AM]
மே 18‐ஆம் தேதி புலிகள் அமைப்பு அழிக்கப்பட்டு பிரபாகரன் கொல்லப்பட்டதாக அறிவித்தது இலங்கை அரசு. அதை ஒட்டி இலங்கை சென்ற இந்தியத் தூதர்கள் பிரபாகரனின் மரணச் சான்றிதழையும் பொட்டம்மானின் மரணச்சான்றிதழையும் கேட்டனர். ....